வண்ணாத்திவில்லு பிரதேச செயலக விளையாட்டு விழா

புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் 46வது தேசிய விளையாட்டு விழாவுக்கு இணையாக கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக இடம்பெற்றது. வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் சத்துரக ஜயசிங்க தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஆர். பி. கரன் மற்றும் வடமேல் மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல விளையாட்டுக் கழகங்கள் பல்வேறு போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதில் மிலன்குளம் விளையாட்டுக் கழகம் சம்பியனாக வெற்றி பெற்றதுடன், இரண்டாம் இடத்தை பண்டாரநாயகபுர விளையாட்டுக்கழகம் தெரிவானது. இவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் விசேட நிருபர்

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை