பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ கைது

போலிக் கடவுச்சீட்டில் பராகுவே சென்ற முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது செய்யப்பட்டார்.

பிரேசில் கால்பந்தின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ கடந்த 2002இல் உலக கிண்ணம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். உலகின் சிறந்த வீரராக இருமுறை (2004, 2005) தேர்வு செய்யப்பட்டார்.

பார்சிலோனா கழக அணிக்காகவும், 2016இல் சென்னையில் நடந்த புட்சால் கால்பந்து தொடரிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2015இல் சகோதரருடன் இணைந்து அனுமதியின்றி மீன் பிடி குளம் அமைத்த வழக்கில் நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்டாத ரொனால்டினோ, அவரது சகோதரரின் கடவுச்சீட்டுகள் 2019 ஜூலையில் பறிமுதல் செய்யப்பட்டது.

அண்மையில் ரொனால்டினோ, தனது சகோதரர் மொரைய்ராவுடன் போலி கடவுச்சீட்டில் பராகுவே சென்றார். தகவல் அறிந்த பொலிஸார் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரு நாட்களுக்குப் பின் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தவறான நோக்கத்துடன் பொது ஆவணங்களை பயன்படுத்தியதால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இவர்களுக்கு போலி கடவுச்சீட்டு கொடுத்த பிரேசில் தொழிலதிபர் சவுசா லிராவும் கைதாகினார்.

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை