முறி மோசடி; முத்துராஜா சுரேந்தினுக்கு வி.மறியல்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துராஜா சுரேந்திரன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும்18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிதொடர்பில் 8ஆவது சந்தேகநபராக இவர் கருதப்படுகின்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 10 பேரை கைது செய்வதற்காக நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sat, 03/07/2020 - 14:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை