பெத்லஹாம் தேவாலயத்திற்கு பூட்டு

கெரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக மதிக்கப்படும் தலத்தில் கட்டப்பட்டிருக்கும் பெத்லஹாம் தேவாலயம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெத்லஹாம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில் உள்ளூர் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை மூடும்படி பலஸ்தீன சுகாதார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

“பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து நிர்வாகத்தின் முடிவை நாம் மதிக்கிறோம்”என்று திருச்சபை அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி கடைசியில் கிரேக்கத்தில் இருந்து வந்த சுற்றுலா குழுவைச் சேர்ந்த இருவருக்கு வைரஸ் தொற்றி இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் சுகாதார பணியகத் தலைவரான இமாத் ஷஹதா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஹோட்டல் ஊழியர்களின் சந்தேகத்திற்கு இடமான நான்கு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை