சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் கடும் சரிவு

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய பொருளாதார நிலைமையில் கடும் சரிவு காணப்படுகிறது.

மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சி 50 வீதம் வரை குறைந்துவிடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகமான நாடுகள் இந்த ஆண்டு பொருளாதார சரிவைக் கண்டுள்ளதால் மிகப்பெரிய பெருநிறுவனம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நோயின் தாக்கம் காரணமாக பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு அசுர பொருளாதார வளர்ச்சி என்ற கனவுகளையும் இலக்கையும் கொரோனா வைரஸ் தகர்த்து விட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

189 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கொரோனா பாதிப்பால் சரிந்து வருகிறது.

இந்த நோய்த் தொற்றை கையாள்வதற்க வறிய மற்றும் மத்திய வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ நிதி தயாராக வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை