உலகெங்கும் இஸ்லாமிய வழிபாடுகளில் கட்டுப்பாடுபாடசாலை செல்ல முடியாமல் 300 மில். மாணவர்கள் பாதிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகளிலும் தேசியளவில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் சுமார் 300 மில்லியன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் தோன்றிய சீனாவில் மாத்திரம் சில வாரங்களுக்கு முன்னர் வகுப்பறைகள் மூடப்பட்டிருந்தபோதும் தற்போது மூன்று கண்டங்களின் 22 நாடுகளில் பாடசாலைகளை மூடும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தென் கொரியா, ஈரான், ஜப்பான், பிரான்ஸ், பாகிஸ்தான் மற்றும் மேலும் பல நாடுகளில் உள்ள மாணவர்களும் தற்போது பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த வரிசையில் புதிதாக இத்தாலி இணைந்துள்ளது. நாட்டின் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக இத்தாலி நிர்வாகம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மூலோபாயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த கல்வி அமைச்சர்களுடன் வரும் செவ்வாய்க்கிழமை அவசர சந்திப்பு ஒன்று யுனெஸ்கோ ஏற்பாடு செய்துள்ளது. இந்த வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கல்வியை தொடர்வது பற்றி இதன்போது ஆராயப்படவுள்ளது.

நெருக்கடியான நேரங்களில் பாடசாலைகளை மூடுவது புதியது அல்ல என்றாலும், இப்போது மாணவர்களின் படிப்பு முடங்குவது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக இருப்பதால், மாணவர்களின் கற்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசோலே கவலை தெரிவித்துள்ளார்.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை