கிழக்கில் சகல பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணத்தில் மாணவர்களுக்கான சகல பரீட்சைகளும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார். 

கொரோனா அச்சம் காரணமாக நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடப்பட்டதையடுத்தே கிழக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த சகல பரீட்சைகளும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

சிலவேளை வலயத்திலிருந்து பரீட்சைவினாத்தாள்கள் அதிபர்களினால் கொண்டுசெல்லப்பட்டிருந்தால் அதனைத் திறக்காது அப்படியே மீண்டும் வலயக்கல்விக் காரியாலயத்தில் ஒப்படைத்துவிடுமாறு கேட்கப்பட்டுள்ளது. 

நாளையதினம் தொடக்கம் க.பொ.த உயர்தரத்திற்கான முன்னோடிப் பரீட்சை நடைபெறவிருந்தது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் முன்னோடி மாதிரிப்பரீட்சைநடைபெறவிருந்தது. மேலும்வலயங்களில் விளையாட்டுப்போட்டிகள், தமிழ்மொழித்தினப்போட்டிகள் போன்றனவும் நடைபெறவிருந்தன. இவை அனைத்தும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது .

காரைதீவு குறூப் நிருபர்  

Sat, 03/14/2020 - 09:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை