வெற்றியை தனதாக்கி கொண்ட ஐயனார் விளையாட்டுக்கழகம்

வவுனியா பம்பைமடு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாள் டெஸ்ட் போட்டியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் வெற்றியை தனதாக்கி கொண்டது. ஐயனார் விளையாட்டுக்கழகம் மற்றும் ஸ்டார்பைட் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் இப் போட்டி நடைபெற்றது.

இவ் டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்டார் பைட் விளையாட்டுக்கழக அணித் தலைவர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

மதியநேரம் வரை துடுப்பெடுத்தாடிய ஸ்டார் பைட் அணியினர் அனைத்து இலக்குகளையும் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸ்க்காக 179 ஒட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது. அவ் அணி சார்பாக ஜான்சன் அதிகபட்சமாக 35 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ஐயனார் விளையாட்டுக்கழகம் சார்பாக சிவா 04 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸ்யை ஆரம்பித்த ஐயனார் விளையாட்டுக்கழம் முதல் நாள் போட்டி நிறைவில் ஆறு விக்கெட்களை இழந்து 140 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இறுதி நாளான நேற்று முன்தினம் முதல் இன்னிங்ஸ்க்காக 39 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது ஆட்டத்தை தொடங்கிய ஐயனார் விளையாட்டுக்கழக அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 39 ஒட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் ஞானம் 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய ஸ்டார்பைட் அணியினர் அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ஒட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

148 என்ற வெற்றி இலக்குடன் மீண்டும் துடுப்பெடுத்தாடிய ஐயனார் விளையாட்டுக்கழகம் ஐந்து விக்கெட்களை இழந்து 150 ஒட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஐயனார் விளையாட்டுக்கழகம் சார்பாக அனுசன் 46 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இப் போட்டி நேற்று முன்தினம் நிறைவுக்கு வந்தது.

வவுனியா விளையாட்டு நிருபர்

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை