போராட்டத்தில் தோல்வி கண்டது நவாந்துறை சென் நீக்கலஸ்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய ரீதியான பிரிவு இரண்டுக்கான உதைபந்தாட்ட தொடரில் பலத்த போராட்டத்தின் மத்தியில் சம்பியன் வாய்ப்பை இழந்தது நாவாந்துறை சென் நீக்கலஸ் விளையாட்டு கழகம்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய ரீதியான பிரிவு இரண்டுக்கான உதைபந்தாட்ட தொடரில் இறுதிப்போட்டியில் பொலனறுவை தேசிய விளையாட்டு திடலில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

இப் போட்டியில் யாழ் நாவாந்துறை சென் நீக்கலஸ் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து காலி குருந்துவத்த ஐக்கிய விளையாட்டு கழகம் மோதியது. இதன்போது பலத்த போராட்டத்தின் மத்தியில் 2-3 என்ற கோல் ரீதியில் யாழ் நாவாந்துறை சென்நீக்கிலஸ் விளையாட்டு கழகத்தினை வீழ்த்தி காலி குருந்துவத்த ஐக்கிய விளையாட்டு கழகம் சம்பியனாகியது.

காலி குருந்துவத்த ஐக்கிய விளையாட்டு கழகம் சார்பில் எம்.எப்.எம்.பர்ஹான் ஒரு கோலினையும் எம்.என்.எம். உஸ்மன் இரண்டு கோலினையும் அடித்தனர்.

நாவாந்துறை சென் நீக்கலஸ் விளையாட்டு கழகம் சார்பாக வி.விக்கினேஸ் மற்றும் எ.பிலிப்ராஜ் ஆகியோர் தலா ஒரு கோல்களை அடித்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை