சமநிலையில் முடிந்த 'வீரர்களின் சமர்'

வீரர்களின் சமர் எனப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கும் இடையிலான இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற இப் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய மகாஜனாக் கல்லூரி அணி, 313 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தவரோயதக் கல்லூரி அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகையில், ஸ்கந்தா அணியின் ஆட்டம் வித்தியாசமாக இருந்தது. அவ் அணியின் கௌரிசங்கர் மற்றும் பிதுந்தா இணை, அணியினை இமாலய ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் சதம் கடந்தனர். கௌரி சங்கர் 129 ஓட்டங்களையும், பிதுந்தா 117 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். டன்ஸன் 77, தனுஸ்ராஜ் 46, றிக்ஸன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, 9 விக்கெட்களை இழந்து 500 ஓட்டங்களை ஸ்கந்தா அணி எடுத்து, தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. ஆட்டமும் சமநிலையில் முடிவடைந்தது.

யாழ். விளையாட்டு நிருபர்

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை