பெண்கள் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேற்றம்

மெல்போர்னில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ண தொடரின் குழுநிலை சுற்று போட்டியில் இந்தியாவிடம் 7 விக்கெட்டுகளால் தோல்வி அடைந்த இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

மேல்போர்னில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகட்சமாக இலங்கை அணித்தலைவி சாமரி அத்தபத்து 33 ஓட்டங்களை எடுத்தார். இந்தியா சார்பில் பந்து வீச்சில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்்டியது. 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராதா யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

குழுநிலை சுற்றில் விளையாடிய நான்கு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மறுபுறம் மூன்று போட்டிகளில் தோற்ற இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை