இந்திய அணி தடுமாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

கிறிஸ்சேர்ச்சில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக விஹாரி 55, புஜாரா 54, பிருத்வி ஷா 54 ஓட்டங்கள் சேர்த்தனர். ஜேமிஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 235 ஓட்டங்களை பெற்றது. லாதம் 52, ஜேமிஸன் 49 ஓட்டங்களை எடுத்தனர். முகமது ஷமி 4 விக்கெட்டுகள், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், 7 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. நேற்று 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை