சீனாவில் ஒருவருக்கு மாத்திரம் உள்நாட்டில் வைரஸ் தொற்று

சீனாவில் நாட்டுக்குள் நேற்று ஒருவருக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு வெளிநாட்டில் இருந்து வந்த 20 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த வைரஸ் தொற்று முதல் முறை தோன்றியதாக நம்பப்படும் வூஹான் நகரிலேயே ஒருவருக்கு நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பரில் இந்த நகரில் இருக்கும் காட்டுவிலங்குச் சந்தை ஒன்றில் இருந்தே வைரஸ் தொற்றியதாக பரவலாக நம்பப்படுகிறது.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் வூஹான் நகர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதோடு அடுத்த சில தினங்களில் அந்த நகரை தலைநகராகக் கொண்ட ஹுபெய் மாகாணமும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் ஹுபெய் மாகாணத்திற்கு வெளியில் கடந்த சில தினங்களில் எந்த புதிய நோயாளியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் சீனாவுக்கு நாளாந்தம் 20,000 பேர் வரை வரும் நிலையில் அங்கு வெளிநாட்டில் இருந்து நோய் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா அறிமுகம் செய்துள்ளது.

இதில் மேலும் 20 வெளிநாட்டில் இருந்து வந்த வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கை சீனாவில் 143 ஆக உயர்ந்துள்ளது.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை