‘சீன வைரஸ்’ எனக் கூறிய டிரம்ப் மீது சீனா விசனம்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன வைரஸ் என்று குற்றம் சாட்டிய நிலையில், அமெரிக்கா தங்களைக் களங்கப்படுத்துவதாக சீனா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க உயரதிகாரிகளும் சீனாவின் மீது குற்றம் சுமத்தினர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனாவை சீன வைரஸ் என்று தெரிவித்திருந்தார். கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் மாறி மாறிக் குற்றம் சாட்டிய நிலையில், டிரம்ப்பின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் வாங் கூறும்போது, “இந்த வார்த்தை கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. களங்கப்படுத்துவது போல் உள்ளது.

சீனாவுக்கு எதிராக நியாயமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவிலேயே விமர்சகர்கள் இது இனவெறித் தாக்குதல் என்றும் ஆசிய–அமெரிக்க சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை