நீல நேவி அணி வெற்றி

சாய்ந்தமருது வொலிவேரியன் மைதான அபிவிருத்தி கண்காட்சி போட்டியில் நீல நேவி அணியினர் 4 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றனர்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சினேக பூர்வ கிரிக்கெட் கண்காட்சி போட்டியில் நீல நேவி அணியினரை எதிர்த்து பச்சை ஆமி அணியினர் மோதிக் கொண்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நீல நேவி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 17 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியிலே 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குக்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிரீன் ஆமி அணியினர் 16.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக நீல நேவி அணியைச் சேர்ந்த எம்.ஜி.எம். தாஜுதீன் தெரிவுசெய்யப்பட்டார்.

கல்முனை மத்திய தினகரன் நிருபர்

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை