கொரோனாவை முறியடிக்கும் நடவடிக்ைக

தேசிய வேலைத்திட்டமாக பாருங்கள்

 அற்ப அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம்

 தொற்று நோயை கட்டுப்படுத்த பிரித்தானியர் சட்டத்தை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம்

கொரோனா வைரஸை வைத்து அற்ப அரசியல் இலாபம் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தற்போதைய எதிரணியினர், தோல்வியுற்ற தம் அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில் வழங்கும் எந்தவொரு ஆலோசனையையும் கருத்தில் கொள்ள நாம் தயாரில்லை என்று தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

கோவிட் - 19 வைரஸ் தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுகாதாரம், போஷாக்கு, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் எந்தவொரு அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்தக் கூடியதும் கட்டுப்படுத்த முடியாதுமான இரண்டு விடயங்கள் உள்ளன.

அந்த வகையில் காலநிலை மாற்றங்கள், இயற்கை அனர்த்தங்கள்,தொற்று நோய்கள் போன்றவற்றை எந்தவொரு அரசாங்கத்தினாலும் கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறான சவால்களுக்கு அரசாங்கம் முகம் கொடுத்தாக வேண்டும். கட்டுப்படுத்தக்கூடிய விடயங்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியினரின் ஆலோசனை தேவைப்படாது. ஏனெனில் உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்தினரின் 30 வருட கால பயங்கரவாதத்தைத் தோற்கடித்த அனுபவமும் திறமையும் ஆளுமையும் கொண்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளரான தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தோல்வியுற்ற தரப்பினர் தமது தோல்வியுற்ற அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில் வழங்கும் ஆலோசனைகளை கருத்தில் கொள்ள நாம் தயாரில்லை.

இது உலகலாவிய ரீதியில் பரவிவரும் ஒரு தொற்று. இவ்வாறான தொற்றுகளுக்கு இந்த நாடு வரலாற்றில் முகம் கொடுத்துள்ளது. குறிப்பாக மலேரியா தொற்றின் போது வித்தியாசமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அரசாங்கத்துடன் எவ்விதத் தொடர்பை கொண்டிராத இடதுசாரியினரான அன்றைய எதிரணியினர் இப்போதைய எதிரணியினர் போன்று நானறிந்த வரலாற்றில் செயற்பட்டதில்லை. மலேரியா தொற்று ஏற்பட்ட போது கலாநிதி என்.எம். பெரேரா, கொல்வின் அர் டி சில்வா, பிலிப் குணவர்தன போன்றோர் அன்றைய அரசில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் மலேரியா தொற்று ஏற்பட்டிருந்த பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவி ஒத்துழைப்புக் களை உச்சளவில் நல்கினர். அதனால் தான் அவருக்கு 'பருப்பு மாத்தையா' என்ற பெயர் ஏற்பட்டது. அவர்களது பணிகளை இன்றைய எதிரணியினருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இவர்களது செயற்பாடுகள் தொடர்பில் பெரும் கேள்வி எழுகின்றது.

எமது தீவு நாடு என்றாலும் பூகோள பொருளாதார நிலைமையின் கீழ் எமக்கு உணரக்கூடிய அழுத்தங்களை மேற்கொள்ள முடியாது. என்றாலும் தற்போதைய சூழலில் உச்சளவில் அரப்பணிப்போடு நாம் வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஜனாதிபதியும், பிரதமரும் சுகாதார அமைச்சரும், இராணுவத்தினரும், பொலிஸாரும் சுகாதார துறையினரும் நாட்டின் மக்களைப் பாதுகாப்பதற்காக உச்சளவில் பணியாற்றி வருகின்றனர். இதன் நிமித்தம் பரந்தளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

இருந்த போதிலும் வகைதொகையற்ற வகையில் வதந்திகளை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் பரப்பி வருகின்றனர். இதில் ஐ.தே.கவின் பிரதேச மட்ட முக்கியஸ்தர்களும் கூட ஈடுபடுகின்றனர்.

மர்லின் மரிக்கார்

 

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை