ரவி கைதாவதை தடுக்க ரிட் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது

மேன்முறையீட்டு மன்றில் சட்ட மாஅதிபர் தெரிவிப்பு

 முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் இழைக்காமல் நீதிமன்றத்துக்கு வரவில்லை. எனவே 2016 பிணை முறி ஊழல் தொடர்பாக அவர் கைது செய்யப்படுவதை தவிர்க்க ரிட் அதிகாரத்தின் சாதகத்தை அவர்,பெற்றுக்கொள்ள முடியாதென சட்ட மாஅதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு ஒன்றை சமர்ப்பித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மூவரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் அழைப்பாணை விடுத்திருந்தது. இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு ரவி கருணாநாயக்க மற்றும் மூவர் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு எதிராக சட்டமா அதிபர் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்த போதே மேற்கூறியவாறு கூறப்பட்டது. சட்டமா அதிபரின் சார்பாக சிரேஷ்ட பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் மகிந்த குணதிலக்க நீதிமன்றத்தில் இந்த ஆரம்ப ஆட்சேபனையை முன்வைத்தார்.

2016 மார்ச் மாதம் திறைசேரி பிணை முறிகள் வெளியிடப்பட்டபோது அப்போதைய சந்தை நிலைவரத்தை சாதுர்யமாக கையாண்ட வகையில், பிடியியல் குற்றத்தை இழைத்தமைக்காக இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பாக மாஜிஸ்திரேட் பாரபட்சமாக செயற்பட்டாரென்ற மனுதாரரின் கூற்று மாஜிஸ்திரேட் விசாரணையின் போதே எழுப்பப் பட்டிருக்க வேண்டும். அப்போதே எழுப்பப்பட்டிருந்தால் மாஜிஸ்திரேட் அதனை ஏற்றுக்கொண்டிருக்க முடியும். எனவே கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் பாரபட்சமாக நடந்துகொண்டார் என்பது சரியானதல்ல என்று சிரேஷ்ட பிரதி சொலிசிஸ்டர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்த அழைப்பாணையை தடுத்து வைக்க

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை