ஆண்கள் பிரிவில் திருமலை, பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு அணிகள் வெற்றி

கிழக்கு மாகாண விளையாட்டு விழா கரம் சுற்றுப் போட்டியின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், திருகோணமலை மாவட்ட கரம் அணியினரும்,பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட கரம் அணியின ரும் வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆண்கள் பிரிவில், இரண்டாமிடத்தை அம்பாறை மாவட்ட கரம் அணியினரும், பெண்கள் பிரிவில் இடண்டாமிடத்தை, திருகோணமலை மாவட்ட கரம் அணியினரும் பெற்றுக் கொண்டனர்.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸின் வழிகாட்டலில் நடைபெற்ற கரம் சுற்றுப் போட்டி, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு கட்டடத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்றது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண், தனி மற்றும் குழு அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின.

அம்பாறை மாட்ட அணி சார்பாக அக்கரைப்பற்று சன்ரைஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.எச்.ஜெய்னுடீன் தலைமையில் ஐ.எல்.சரிப்டீன், என்.ரி.நழீம், எம்.கிரிஷ்டி, ஏ.சி.சுஹைப், எம்.ஹயாம், எம்.எம்.முபீன் ஆகியோர் பங்குபற்றினர்.கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பயிற்றுவிப்பாளர் ஏ.டபிள்யூ.எம்.பாஸித், சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேன உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் சுற்றுப் போட்டியில் கலந்து சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை