கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் மையத்துக்கு 5 பேரூந்துகளில் மக்கள் அழைத்துவரப்பட்டனர்

கேப்பாபுலவு விமானப்படைதளத்தில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் மையத்துக்கு இந்தியாவில் இருந்து வருகைதந்த மேலும் ஒரு தொகுதி மக்கள் இன்று (22) அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.

வடக்கில் உள்ள இலங்கை விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பௌத்த புனித இடமான புத்தகயாவுக்கு யாத்திரை சென்று நாடுதிரும்பிய பௌத்த பிக்குகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 5 சொகுசு பேரூந்துகளில் விமானப்படையினரின் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுள்ளனர். இவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் விமான படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்னிலையில் நேற்றும் (21) முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் அழைத்து வரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு விசேட நிருபர்

Sun, 03/22/2020 - 13:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை