ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை; 1ஆவது தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்

ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை; 1ஆவது தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்-Leprosy Hospital to be Used as the Quarantine Centre

ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை இலங்கையின் முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் ஈரான், தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை ஆனது, தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள, தேசிய செயற்றிட்ட பாதுகாப்பு குழுவினரால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குறித்த தனிமைப்படுத்தல் காலப்பகுதியில், அங்கு தங்குவோருக்கு அவசியமான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இம்மத்தியநிலையத்தில் குறித்த நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பப்படுவார்கள்.

இந்நடவடிக்கைக்காக, இலங்கை இராணுவத்தின் முழு ஒத்துழைப்பையும் பெறவுள்ளதாகவும் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Wed, 03/04/2020 - 17:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை