அமெரிக்காவில் சூறாவளி தாக்கி 25 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தை அடுத்தடுத்து தாக்கிய இரு பலத்த சூறாவளிகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

டென்னசியின் மிகப்பெரிய நகரான நஷ்வில்லேவில் வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லாமல் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த சூறாவளிகள் தாக்கி இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்த 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு யுத்த வலயம் போல் அந்த நகர் காணப்படுவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். இதனால் 44,000 இற்கும் அதிகமானவர்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ளிக்கிழமை (நாளை) நேரில் சென்று பார்வையிட உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை