ஈராக்கின் புதிய பிரதமராக தெளபீக் அலாவி நியமனம்

ஈராக்கில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரான மொஹமது தெளபீக் அலாவியை புதிய பிரதமராக ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் நியமித்துள்ளார்.

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஈராக் பிரதமராக இருந்த அப்தல் அப்துல் மஹ்தி கடந்த நவம்பர் மாதம் தமது பதவியை இராஜினாமா செய்தார். இந்த ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

புதிய அரசொன்றை அமைப்பதற்கு அலாவிக்கு ஒரு மாத அவகாசம் இருப்பதோடு முன்கூட்டிய தேர்தல் ஒன்று வரை அவர் பதவியில் நீடிக்கவுள்ளார். எனினும் அவர் பதவியேற்ற உடன் ஆர்ப்பாட்டங்களுக்கு தமது ஆதரவை வெளியிட்டிருந்தார்.

முந்தைய பிரதமர் வேட்பாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை