மூளை அறுவைச் சிகிச்சையில் வயலின் வாசித்த நோயாளி

லண்டன், கிங்ஸ் கொலேஜ் மருத்துவமனையில் மூளை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும்போது 53 வயதான டக்மர் டர்னர் என்ற நோயாளி வயலின் வாசிக்க கோரப்பட்டுள்ளார்.

தொழில்சார் வயலின் இசைக்கலைஞரான அந்த பெண்ணின் இசைத் திறன் அறுவைச் சிகிச்சையின்போதும் பாதிப்புறமல் இருப்பதற்கே மருத்துவர்கள் இதனைச் செய்துள்ளனர்.

மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவரது இடது கை உணர்திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூளையின் இந்த பகுதி வயலின் வாசிப்பதற்கும் முக்கிமானதாகும்.

இந்நிலையில் 90 வீதமான கட்டி அகற்றப்பட்டு அந்த சிகிச்சை வெற்றி அளித்துள்ளது.

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை