அக்கரைப்பற்றில் கோலாகல சுதந்திர தின நிகழ்வு

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பிரதம அதிதி

அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர நிகழ்வு நேற்று (04) மாநகரசபை நீர்ப் பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் மேயர் அதாஉல்லா அஹமட் ஷக்கி தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.ராஸீக் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் மாணவர்களால் அக்கரைப்பற்று மாண்மியம் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றது. தொட ர்ந்து நாட்டுக்காக நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த முப்படைகள், பொலிஸ் மற்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க தலைவர்களுக்காக பிரார்த்தனை இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதி அதாஉல்லா உரையாற்றுகையில், இலங்கைத் தாயின் புதல்வர்களாகிய நாம் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றி பேசியதோடு, தேசிய மட்டக் கொண்டாட்டம் போன்று மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அக்கரைப்பற்று மேயர் அதாஉல்லா அஹமட் ஷக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

அக்கரைப்பற்று தினகரன் சுழற்சி நிருபர்

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை