அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு பலர் ஆதரவு

அரசியல் கலாசாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி புதிய பாதையில் நாட்டை கொண்டு செல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களை மாத்திரமன்றி முழு இலங்கயைரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ள தென்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வெலிமட திவிதொடவெலவில் அண்மையில் (01) நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள்,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட, இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அமைச்சர்:

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.இத்திருத்தத்தில் எதிர்பார்த்தது போன்று எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.சட்ட அதிகாரத்தை அர்த்தத்துடன் நிறுவி, நீதித் துறையில் ஏற்படும் தாமதத்தை இல்லாமலாக்கி, நியாயம் வழங்குவதில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதே எமக்கு இன்றுள்ள சவாலாகும். ஐக்கிய தேசிய கட்சியினர் பலர் எம்முடன் பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். நாட்டை முன்னேற்றும் ஜனாதிபதியின் நன்னோக்கங்களுக்கு உதவும் பொருட்டே,அவர்கள் எம்முடன் இணைகின்றனர்.

இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கல், நிறைவேற்று அதிகாரம் மற்றும் அரசியலமைப்பை வலுப்படுத்தி நாட்டை முன்னேற்றல்,என்பவற்றுக்கு

பாராளுமன்னறத்தில் பலமான அதிகாரம் தேவை.

19 ஆவது திருத்தத்தை இல்லாமலாக்கி அதிகாரங்களை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.

இதேபோல் கடனைச் செலுத்த வேண்டியுமுள்ளது.

நாட்டில் உற்பத்தி செய்யக் கூடியவைகளை இறக்குமதி செய்யும், செயற்பாடுகளைத் தடைசெய்ய வேண்டும். விவசாயிகளை பலப்படுத்தும் புதிய விவசாய கொள்கை ஒன்றையும் செயற்படுத்தவுள்ளோம்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு உள்,வெளிவாரியென்ற பேதமின்றி வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமும் எம்மிடமுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் குறித்து கவனம் செலுத்தும் எமது அரசாங்கம் ஒரு நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே கட்சி, நிற பேதமின்றி நாம் அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை