தேர்தலில் ஐ.தே.கவின் சின்னம் யானையாகவே இருக்க வேண்டும்

ஐக்கிய தேசிய கூட்டணியின் பெயர் ஏதுவாக அமையப்பெற்றாலும் பொதுத் தேர்தலுக்கான அதன் சின்னம் யானையாகவே இருக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் 58 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியிருப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டணியின் பிரதான கட்சியாக ஐ. தே. க காணப்படுவதால் மக்களுக்குப் பரீட்சயப்பட்ட யானைச் சின்னம் வெற்றிக்குரிய சின்னமாகக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 77 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 58 பேர் மேற்படி கோரிக்கையை கட்சித் தலைவரை சந்தித்து எடுத்துரைத்திருப்பதாகவும் ரங்கே பண்டார தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மீதமுள்ள 19 உறுப்பினர்களுடன் கலந்துரையாடிவிட்டு இன்று வியாழக்கிழமை தீர்மானம் எடுப்பதாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளார்.

காலத்துக்குக்காலம் தேர்தலின்போது சின்னங்களை மாற்றுவதால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த பாலித ரங்கேபண்டார, கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சின்னங்களை மாற்றியதன் காரணமாக அக்கட்சி மக்களிடம் மறக்கப்பட்ட கட்சியாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

எம். ஏ.எம். நிலாம்

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை