உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

பேருவளை மருதானை ஓல்ட் என் யன்ங் விளையாட்டுக் கழகம் போசம் லங்காரி ஸோட் அனுசரனையுடன் ஏற்பாடு செய்த அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி பேருவளை மருதானை வத்திமிராஜபுர விளையாட்டரங்கில் நடைபெற்றபோது பேருவளை வைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

பேருவளைப் பகுதியைச் சேர்ந்த 20 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிநேற்று 16 ஆம் திகதிமாலை இடம்பெற்றதோடு இறுதிப் போட்டியில் வைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகமும் கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டியில் மோதின.

போட்டி ஆரம்பமாகி முடியும் வரை எந்தவொருஅணியும் கோல் பெற்றுக் கொள்ளாதநிலையில் பெனல்டி முறைவைக்கப்பட்டது. இதன் போதுவைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் 3 – 2 என்றகோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுசம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் பாராட்டைபெற்றுக் கொண்டது.

இப்போட்டிக்கு ஆர்.ஏ. தரங்க மஸ்தியஸ்தராக கடமையாற்றினார். பரிசளிப்பு விழாவில் பிரபல சமூக சேவையாளருமான எம்.ரீ.எம் ரிஸ்வான் ஹஜியார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். போட்டியில் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டவைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 30 ஆயிரம் ரூபாவும் இறுதிப் போட்டியில் பங்குபற்றி ரனஸப் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டகிரேட் ஸ்டார் அணிக்கு 15000 ரூபாவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேருவளை நகர சபை உறுப்பினர் டில்சாத் அன்வர் உட்பட ஓல்ட் என் யன்க் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பலரும் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

பேருவளை விஷேட நிருபர். 

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை