ஒப்சேர்வர் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டில் முதல் போட்டி ஆரம்பம்

சரித்திரபூர்வமான முதலாவது பாடசாலை கிரிக்கெட் விருது வழங்கல் நிகழ்வு சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையின் 50ஆவது நிறைவின் போது இடம்பெற்றது. சண்டே ஒப்சேர்வர் பத்திரிகைக்கு இம்மாதம் 92ஆவது நிறைவு விழா இடம்பெறுகிறது. எனவே ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது 42 வருடங்களுக்கு முன் இடம்பெற்றது.

42 வருடங்களுககு முன் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்குவதை ஆரம்பித்து வைத்த ஒப்சேர்வர் தற்போது பாடசாலைகளில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பது குறிப்பிடத்தக்கது.

ரோயல் கல்லூரியின் ரஞ்சன் மடுகல்லவே 1978/79 ஆம் ஆண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராக ஒப்சேர்வர் விருதை வென்றார். அதேபோன்று சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை இரு தடவைகள் 1980, 1982) வெற்றி பெற்ற முதலாவது பாடசாலை வீரர் ஆனந்தாக் கல்லூரியின் அர்ஜுன ரணதுங்க ஆவார்.

எந்தவொரு பாடசாலை கிரிக்கெட் வீரருக்கும் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வெல்வது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமையும் என்று அர்ஜுன ரணதுங்க அண்மையில் வழங்கிய ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

நடுவரிசை ஆட்டக்காரரான அர்ஜுன் ரணதுங்க 93 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 5105 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் நான்கு சதங்களும் 38 அரைச்சதங்களும் உள்ளடங்கியிருந்தன.

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை தான் வெற்றி பெற்றதை தனது வாழ்நாள் சாதனை என்று கூறும் அர்ஜுன ரணதுங்க பாடசாலை கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் என்று விருதுகளை வெல்வது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த தன்னம்பிக்கை அவரை முன்னணி கழகக் கிரிக்கெட்டுக்கும் கழகக் கிரிக்கெட்டில் இருந்து நாட்டுக்காக விளையாடும் சர்வதேச தரத்துக்கும் இட்டுச் செல்லும் என்று அர்ஜுன ரணதுங்க கூறுகிறார்.

ஒப்சேர்வர் விருதை தான் இருமுறை பெற்றது ஒரு போதும் மறக்க முடியாதது. சர்வதேச கிரிக்கெட்டில் தான் முதன் முதல் அடியெடுத்து வைத்த போது தனக்கு தன்னம்பிக்கையை தந்தது மேற்படி விருதுதான் என்று கூறுகிறார் அர்ஜுன ரணதுங்க.

அனந்தாக் கல்லூரியில் மாணவனாக இருந்த பொதே 1982இல் இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடன் நடைபெற்ற போது அதில் விளையாடிய பெருமைக்குரியவர் அர்ஜுன.

இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய முதலாவது மாணவன் என்ற பெருமை மட்டுமன்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாவது அரைச்சதத்தை பெற்ற பாடசாலை மாணவன் என்ற பெருமையும் இவரையே சாரும்.

அர்ஜுன ரணதுங்கவிடம் ஒளிந்திருந்த கிரிக்கெட் திறமையை உணர்ந்து கொண்ட மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் பிரபலமான கார்பில் சோபர்ஸ் அவரை முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் சேர்த்துக்கொள்ளுமாறு இலங்கை தெரிவுக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனைக்கேற்ப முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே அரைச்சதம் (54) பெற்று சேர் கார்பில்ட் சோபஸுக்கு நன்றிக்கடன் செலுத்தினார் அர்ஜுன ரணதுங்க.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமன்றி ஒருநாள் போட்டிகளிலும் அரஜுன திறமை காட்டத் தவறவில்லை. 269 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 7456 ஓட்டங்களைக் குவித்தார். அதில் நான்கு சதங்களும் 49 அரைச்சதங்களும் உள்ளடங்கியிருந்தன.

கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் 1996 இல் இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத் தந்தமை உள்ளிட்ட பல பெருமைகளை ஈட்டிக்கொடுத்தவர் அர்ஜுன ரணதுங்க. எனினும் 1980 மற்றும் 1982 தான் வெற்றிபெற்ற ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதுகளை அரிய பொக்கிஷமாகக் கருதுகிறார் அர்ஜுன ரணதுங்க.

உலக கிரிக்கெட் அரங்கில் இலங்கையைப் பற்றி பேசும் போது 1996 மார்ச் 17ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை வெற்றியீட்டிய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைப் பற்றி பேசுவதை தவிர்க்க முடியாது.

அந்த அணியில் அர்ஜுன ரணதுங்கவுடன் தற்போது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தீர்ப்பாளராக இருந்த ரொஷன் மகாநாம உள்ளிட்ட ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருது வென்ற பல வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இப்போது எங்கு கிரிக்கெட் விளையாட்டுப் பற்றிப் பேசப்பட்டாலும் உலகக் கிண்ணத்தை வென்ற கிரிக்கெட் அணி என்றுதான் பேசப்படுகிறது.

ஆனந்தா கல்லூரியின் வெற்றிகரமான பல கிரிக்கெட் வீரர்களை இலங்கை அணிக்கு அனுப்பியுள்ளது. அதில் முன்னோடியாக இருப்பவர் அர்ஜுன ரணதுங்கதான். ஆனால் தற்போது ஆனந்தா கல்லூரியில் இருந்தும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறுவது பெரிதும் குறைந்துவிட்டது.

“பாடசாலை கிரிக்கெட்டின் தரம் இப்போது மிகவும் வீழ்ச்சியடைந்து விட்டது. அதிகாரிகள் இப்போது பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்று தெரிகிறது” என்று கவலைப்படுகிறார் அர்ஜுன.

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை