அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்,

‘காட்டுத் தீ நமக்கு கருப்புக் கோடைகாலம். இந்தத் தீ இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆபத்து இன்னும் பல இடங்களில் நமக்கு முன்னால் உள்ளது.

இந்தக் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களை கௌரவிப்பதற்காக நாம் ஒன்று கூடி இருக்கிறோம். தொடர்ந்து இந்த கருப்புக் கோடை காலத்திலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்வோம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேயர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ ஏற்பட்டது.

இதில் 33 பேர் உயிரிழந்தனர். கோலா கரடி, கங்காரு உட்பட பல அரியவகை விலங்கினங்கள் உயிரிழந்தன.

மேலும் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை