‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கியது

‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த டொக்டரை நோய் தாக்கி உள்ளது. காய்ச்சல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் பரவி வரும் ‘கொரோனா’ வைரசால் இதுவரை 490-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை சீனாவை சேர்ந்த லீ வென்லியாங் என்ற டொக்டர் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டு பிடித்து விட்டார்.

சீனாவில் வுஹான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் தான் வென்லியாங் வேலை செய்கிறார். அங்கு இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இவரிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கடல் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள் இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கியதை அறிந்த டாக்டர் லீவென்லியாங் அது ‘சார்ஸ்’ உருவாக காரணமாக புதிய வகை வைரஸ் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

உடனடியாக அவர் இது குறித்த தகவல்களை சக டொக்டர்களுக்கு டிசம்பர் 30-ந்தேதி அனுப்பி உள்ளார். நோயாளிகளை கையாளும் போது பாதுகாப்புக்காக ‘மாஸ்க்’ அணிந்து கொள்ளுங்கள் என நண்பர்களை அறிவுறித்தினார். இந்த தகவல்கள் இணையதளத்தில் வேகமாக பரவியதால் சீன பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர் லீ வென் லியாங்கை கண்டித்துள்ளனர்.

இது போன்ற தகவல்களை பரப்பினால் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என எச்சரித்தோடு அவரிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். பின்னர் ஜனவரி 10-ம் திகதி ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

இரண்டு நாட்கள் கழித்து ஜனவரி 12-ம் திகதி அவரையும் ‘கொரோனா’ வைரஸ் தாக்கியது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வாயிலிருந்து ரத்தம் வந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தற்போது அவர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

ஜனவரி 20-ம் திகதி தான் சீன அரசு ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் குறித்து தெரிவித்தது. அதன் பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகள் டாக்டர் லீ வென்லியாங்கை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இதற்கிடையே டாக்டர் லீ வென்லியாங் படுத்த படுக்கையாக சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் எனக்கு புதிய வகை வைரஸ் தாக்கி உள்ளது. சீனாவில் எனக்கு தெரிந்த மட்டும் 10 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை வெளியே சொல்ல முயற்சித்த என்னை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். இந்த வைரஸ் ‘சார்ஸ்’ போலவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். சீன மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.

வைரசை முதலில் கண்டு பிடித்து லீவென்லியாங்குக்கு அரசு நன்றி தெரிவிக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை