முப்பாய்ச்சலில் உலக சாதனை

மெட்ரிட் உள்ளரங்க தடகள போட்டியில் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் முப்பாய்ச்சல் போட்டியில் உலக சாதனை படைத்தார்.

ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் முப்பாய்ச்சலில் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் 15.43 மீற்றர் நீளம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன்னர் கடந்த 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவின் டட்யானா லெபடேவா 15.36 மீற்றர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதனை தகர்த்து தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார் 24 வயதான யூலிமர் ரோஜாஸ்.

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை