இந்தியா நிதான ஆட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்சில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை எடுத்துள்ளது.

போட்டியின் 3ஆம் நாளான நேற்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, மேலும் 132 ஓட்டங்களை சேர்த்து, 348 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்பின்னர் 183 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை இந்தியா தொடர்ந்தது. பிருத்வி ஷா, புஜாரா, கோலி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மயங்க் அகர்வால் நிலைத்து நின்று அரைச்சதம் கடந்த நிலையில் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

3ஆம் நாள் முடிவில் 39 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை இந்தியா சேர்த்திருந்தது. ரஹானேயும் விஹாரியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை