பங்களாதேஷ் வலுவான ஆட்டம்

சிம்பாப்வேயுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

டாக்காவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸுக்கு 265 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் கிரேக் எர்வின் (107) சதம் பெற்றார்.

பங்களாதேஷ் சார்பில் அபூ ஜெயத் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பங்களாதேஷ் அணி இரண்டாவது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை