முதலையை காக்க சன்மானம் அறிவிப்பு

இந்தோனேசியாவில் முதலை ஒன்றின் கழுத்தைச் சுற்றியுள்ள மோட்டார் சைக்கிள் டயரைக் கழற்றுபவருக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுலவெசித் தீவில் அந்த நான்கு மீற்றர் நீள முதலை உள்ளது.

சில ஆண்டு காலமாகவே அதன் கழுத்து டயரில் சிக்கியுள்ளது.

அவ்வட்டார அதிகாரிகள் பல்வேறு முறை டயரை அகற்றும் முயற்சியில் தோல்வியுற்றனர்.

ஆனால் முதலை மூச்சுவாங்கச் சிரமப்படும் காட்சிகள் இணையத்தில் பரவ அது இறந்துவிடுமோ என்ற அச்சம் தற்போது நிலவிவருகிறது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு வனவிலங்குகளை மீட்பதில் அனுபவம் உள்ளவர்களைப் பரிசு ஈர்க்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை