புர்கினா தேவாலயம் மீது தாக்குதல்: 24 பேர் பலி

வடக்கு புர்கினா பாசோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டு மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் வாராந்த பிரார்த்தனை கூட்டம் நடைபெறும்போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“ஆயர் உட்பட 24 பேர் கொல்லப்பட்டு, மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் சிலர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்” என்று பிராந்திய ஆளுநர் கேர்ணல் சல்போ கபோர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இஸ்லாமியவாத ஆயுதக் குழுக்களால் கிறிஸ்தவ தேவாலங்கள் அடிக்கடி தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஜிஹாதிக்கள் என்று சந்தேகிப்பவர்களால் ஆயர் இல்லத்தில் இருந்து ஏழு பேர் கடத்திச் செல்லப்பட்டனர். மூன்று நாட்களின் பின் ஆயர் உட்பட ஐவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உலகில் வறிய நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோ ஜிஹாதிக்களின் தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

புர்கினாவில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 750 பேர் கொல்லப்பட்டு 600,000 பேர் வரை வீடுகளை வீட்டு வெளியேறியுள்ளனர்.

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை