தென்னாபிரிக்க அணிக்கெதிரான ரி-20: இமாலய வெற்றி இலக்கை எட்டி இங்கிலாந்து சாதனை

தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரைக், 2-−1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

சென்சுரியனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் தென்னாபிரிக்க அணி சார்பில், டெம்பா பவுமா 49 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் 35 ஓட்டங்களையும், ராஸ்ஸி வெண்டர் டஸன் 11 ஓட்டங்களையும், ஹெய்ரின்ச் கிளாசென் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், டுவைன் பிரிடோரியஸ் 11 ஓட்டங்களையும், என்டில் பெலுக்வாயோ 1 ஓட்டத்தினையும், டேவிட் மில்லர் 35 ஓட்டங்களையும், ஜோர்ன் போர்சுன் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் டொம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 223 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ஜேஸன் ரோய் 7 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 57 ஓட்டங்களையும், ஜோனி பேயர்ஸ்டொவ் 64 ஓட்டங்களையும், டாவிட் மாலன் 11 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மோர்கன் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், மொயின் அலி 5 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 2 விக்கெட்டுகளையும், என்டில் பெலுக்வாயோ, டப்ரைஸ் சம்ஸி, டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 22 பந்துகளில் 7 சிக்ஸர்கள் அடங்களாக ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஓய்ன் மோர்கன் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாகவும் ஓய்ன் மோர்கன் தெரிவு செய்யப்பட்டார்.

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை