2024 பல்கலைகளுக்கு மாணவர் பிரவேசம் 2,40,000ஆக அதிகரிக்கும்

2024ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழகங்களில் பிரவேசிப்பதற்கான தகுதியை பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையை 2,40,000 அளவில் அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய அபிவிருத்திக் கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக 2020ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபார்சுகளை சமர்ப்பிப்பதற்கான கல்வி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய விடயங்களுக்கு உட்பட்ட புத்திஜீவிகளைக் கொண்ட விசேட குழு ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பாக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2021 சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் தொகை 3,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 இல் சுமார் 2,86, 000 மாணவர்கள் உயர்தரத்திற்கான கல்வி வாய்ப்பைப் பெறவுள்ளனர். இதன் படி 2024 இல் 2,40,000 பேர் பல்கலை அனுமதி பெறவுள்ளனர்.

 

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை