பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலையில் இன்று சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும்  அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், மத்திய, தென் மற்றும் வட மாகாணங்களிலும் கம்பஹா மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு,பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  

 

Wed, 01/22/2020 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை