லைசியம் மாணவர்கள் அமெரிக்காவில் பிரகாசிப்பு

லைசியம் சர்வதேச பாடசாலையின் நுகேகொடை, வத்தளை, பாணந்துறை மற்றும் கம்பஹா ஆகிய நான்கு கிளைகளின் மாணவர்கள் அமெரிக்காவின் நிவ்போர்ட் கோஸ்ட் கலிபோனியாவில் இடம்பெற்ற இலங்கை எதிர் அமெரிக்கா கராத்தே சம்பியன்சிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர்.

இந்தப் போட்டிகள் கடந்த டிசம்பர் 10ம் திகதி இடம்பெற்றதோடு, இட்டோசுகாய் கராத்தே அமெரிக்க கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லைசியம் சர்வதேச பாடசாலை மொத்தம் ஒன்பது முதலிடங்களையும், ஒன்பது இரண்டாமிடங்களையும், பதினொரு மூன்றாமிடங்களையும் பெற்றுக் கொண்டது.

இம்மாணவர்கள் காத்தா, குமிட்டே மற்றும் அடிப்படை திறன் ஆகிய போட்டிகளில் கலிபோர்னியா இட்டோசுகாய் கிளைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டனர்.

கராத்தே விளையாட்டு இலங்கை மாணவர்களிடையே வேகமாக வளர்ந்து வருவதோடு, லைசியம் சர்வதேச பாடசாலை அதன் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தொடக்கம் கராத்தே விளையாட்டை இணைப் பாடச் செயற்பாடாக இலங்கை இட்டோசுகாய் கிளையுடன் இணைந்து போதித்து வருகின்றது.

இளம் லைசுமர்களுக்கு வரவிருக்கும் பல சாதனைகளுக்கு நிச்சயமாக இது முதல் படியாக அமையும். அனைத்து சம்பியன்களுக்கும் வாழ்த்துக்கள்!

பின்வரும் மாணவர்கள் இந்த சம்பியன்சிப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். லைசியம் சர்வதேச பாடசாலையின் நுகேகொடை கிளையைச் சேர்ந்த லஹான் சமரகோன், சமித் பெத்மகே, ரசெயின் பெரேரா, லஹான் பிரஹ்மன, வஜிர ஹேரத் மற்றும் அகித் கித்துனுக ஆகியோரும், லைசியம் சர்வதேச பாடசாலையின் வத்தளை கிளையைச் சேர்ந்த இனுக விஜேசேகர, நெஹான் வெல்கம, ரமிரு விஜேகோனவர்தன மற்றும் செனோன் லித்தால் ஆகியோரும், லைசியம் சர்வதேச பாடசாலையின் பாணந்துறை கிளையைச் சேர்ந்த லித்திர களுபோவில, விதுன் வெலிதரங்க, லினால் அபேசேகர மற்றும் சுரவி ஹேரத் ஆகியோரும், லைசியம் சர்வதேச பாடசாலையின் கம்பஹா கிளையைச் சேர்ந்த தவ்ரு வித்தாரன.

இவ் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜப்பான் கராத்தேடு இட்டோசுகாய் இலங்கை கிளையின் பிரதிநிதியும், பிரதம பயிற்றுவிப்பாளருமான சென்செய் ஆர். ஜே. அலெக்ஸான்டர் கலந்து கொண்டார்.

புத்தளம் விசேட நிருபர்

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை