கட்டார் - சிலோன் கிண்ண கால்பந்தாட்ட போட்டி புத்தளம் தினகரன் நிருபர்

புத்தளம் ஸாஹிராவின் பழைய மாணவர்களின் 'கட்டார் சஹிரியன்ஸ்' அமைப்பு ஏற்பாடு செய்த கட்டார் சிலோன் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி அண்மையில் கட்டாரில் நடைபெற்றது.

இந்த போட்டி தொடர் அண்மையில் (03) முய்தர் ஸ்போர்ட்ஸ் கழகத்தில் ஆரம்பமானது. 16 அணிகள் எலைட்ஸ் சம்பியன் கிண்ணத்துக்காவும், படைவீரர் சம்பியன் கிண்ணத்துக்காக 40 வயதுக்கு மேற்பட்ட 8 அணிகளும் போட்டியிட்டன.

கல்முனை பிரேவ் லங்கன்ஸ் கழகம், கட்டார் சிலோன் கோப்பையின் எலைட்ஸ் சம்பியன் கிண்ணத்தை எவரோக்ஸ் கழகத்தை வீழ்த்தி சம்பியனானது. புத்தளம் ஸஹிரியன்ஸ் கழகம் மூன்றாம் இடத்தைப்பெற்றது. சிறந்த வீரர் விருதை எவரோக்ஸ் கழக வீரர் பர்ஷாத் முஹம்மத் பெற்றுக்கொண்ட அதேவேளை சிறந்த கோல் காப்பாளர் விருதை கல்முனை பிரேவ் லங்கன்ஸ் கழக வீரர் நிதாஸ் மொஹம்மத் பெற்றுக்கொண்டார்.

கொம்பனித்தெரு கழகம் கட்டார் சிலோன் கோப்பையின் 40 வயதுக்கு மேற்பட்ட படைவீரர் சம்பியன் கிண்ணத்தை பென்டாஸ்டிக் கழகத்தை வீழ்த்தி சம்பியனானது.

கம்பளை ஸஹிரியன்ஸ் கழகம் மூன்றாம் இடத்தை பெற்றது. இதில் சிறந்த வீரர் விருதை கொம்பனித்தெரு வீரர் துஆன் ஹாரூன் ரிஷான் பெற்றுக்கொண்ட அதே வேளை சிறந்த கோல் காப்பாளர் விருதை கொம்பனித்தெரு வீரர் இர்ஷான் முஹம்மத் பெற்றுக்கொண்டார்.

நியாயமாக விளையாடிய கழக விருதை எவராக்ஸ் கழகம் வென்றது. சமூக ஊடக வாக்கெடுப்பில் பிரபலமான அணியாக மாவனல்லை ஸாஹிரா கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு கிண்ணம் வழங்கப்பட்டது. இறுதி ஆட்டத்தைத் தொடர்ந்து நிறைவு விழா நடைபெற்று அங்கு வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

சகல போட்டிகளுக்கும் கியூஸ்போர்ட்ஸிலிருந்து வருகை தந்த 'பாசலாங் என்டோ' மற்றும் கட்டார் கால்பந்து சம்மேளனத்தை சேர்ந்த 'மடு நெல்சன்' ஆகிய இரு சிறந்த நடுவர்கள் மத்தியஸ்தம் வகித்தார்கள்.

கட்டார் இலங்கை கிண்ணத்தினை முறையே சம்பியன்ஸ், இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களை பிரேவ் லங்கன் கழகம், எவராக்ஸ் கழகம், புத்தளம் ஸாஹிரான்ஸ் கழகம், ஸ்லேவ் ஐலேண்ட் கழகம் ,பென்டாஸ்டிக் கழகம் மற்றும் கம்பளை ஸாஹிரா கழகம் ஆகியன பெற்றுக்கொண்டன.

கட்டார் ஸஹிரான்ஸ் (புத்தளம் ஸாஹிராவின் பழைய மாணவர்களின் அணி) நடத்திய போட்டியில் சிறப்பு அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி கலந்து சிறப்பித்தார்.

அவர் அனைத்து சாஹிரியன்சுடன் இணைந்து பாரம்பரிய கேக் வெட்டும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

ஸஹிரியன்ஸ் சார்பாக முஹஸ்ஸம் மொஹிதீன் கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவருக்கு இலங்கை சமூகத்தின் மீதான அர்ப்பணிப்புக்காக பாராட்டு விருதை வழங்கிவைத்தார்.

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை