காரைநகரில் சேதன நெற்செய்கை வயல் விழா

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.

2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் , காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.ஈஸ்வரதாசன், அஞ்சனாதேவி சிறீரங்கன், காரைநகர் பெரும்பாக உத்தியோகத்தர் எஸ்.மயூரன் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், காரைநகர் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி ஆர். பானுமதி, பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

சேதன முறையில் செய்கை பண்ணப்பட்ட மாதிரி வயல் பார்வையிடப்பட்டது. விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து, காரைநகரில் இம்முறை சேதன முறையில் நெற்செய்கையில் ஈடுபட்ட 30 விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கோப்பாய் நிருபர்

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை