மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்க்கசிவுகள் முற்றாக சீரமைப்பு

பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர்க்கசிவு சீர் செய்யப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திட்ட பணிப்பாளர் விஜயரத்ன தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணைப்பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான நீர் கசிவுகள் முழுமையாக சீர் செய்யப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்திட்ட பணிப்பாளர் விஜயரத்ன தெரிவித்தார்.

மஹாவெலி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வாகிக்கப்பட்டு வரும் இந்நாட்டின் பாரிய நீர்த்தேக்கமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அணைப்பகுதியில் சில இடங்களில் அண்மையில் ஏற்பட்ட சிறிய அளவிலான நீர்க்கசிவுகள் முழுமையாக சீர் செய்யப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பி பிரதான அணைக்கட்டுப்பகுதியிலிருந்து நிமிடத்திற்கு 200 லீற்றர் நீர் வெளியேறியதாகவும் தற்போது அதனை 130 லீற்றர் வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு சீன நாட்டு ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் அதிகாரிகள் அழைக்கப்பட்டு அணைக்கட்டின் கசிவு ஏற்பட்ட இடங்கள் சீர் செய்யப்பட்டது. இச் சீர்செய்யும் பணி கடந்த 10 தினங்களாக இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்க்கசிவு ஏற்பட்ட நிலத்தின் தன்மையையும், கசிவின் ஆழம், நீர் கசிந்த திசை என்பவற்றை உயர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குறித்த அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி முதன்முதலாக இந்த நீர் கசிவு அவதானிப்பட்டது.

குறித்த பரிசோதனை அறிக்கை இலங்கை மகாவலி அதிகாரசபையிடம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

எனவே அணைக்கட்டுக்கோ அல்லது நீர்த்தேக்கத்துக்குக் கீழான பகுதிகளில் வசிக்கும் மக்களோ அச்சப்படத்தேவையில்லையென மொறகஹகந்த நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான திட்டப் பணிப்பாளர் டி.பீ.விஜேரத்ன தெரிவித்தார்.

(மாத்தளை சுழற்சி நிருபர்)

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை