தாய்வான் ஜனாதிபதி தேர்தல்: சாய் மீண்டும் அமோக வெற்றி

தாய்வானில் நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி சாய் இங் வென் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சாய் இங் வென் இரண்டாவது தவணைக்கு ஜனாதிபதியாக பொறுப்பேற்கிறார். வாக்களித்த மக்களுக்கு அவர் தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

63 வயது சாய் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தாய்வானின் ஜனாதபதியாக பணியாற்றுவார். அவர் 57 வீதமான வாக்குகளை வென்றார்.

ஜனநாயக முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த ஜனாபதிபதி சாய், தாய்வானிய சுதந்திர நிலைப்பாட்டை ஆதரிப்பவர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குவோமிந்தாங் கட்சியின் ஹான் குவோ யூ சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்.

சீனாவுடன் இன்னும் இணக்கமான போக்கைத் தாய்வான் பின்பற்றினால், தாய்வான் மேலும் வளம்பெறும் என்பது அவரது நம்பிக்கை.

ஹான், சுமார் 39 வீத வாக்குகளைப் பெற்றார். 23 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தாய்வானில் 19 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

அண்மைக் காலமாக, உலக அரங்கிலிருந்து தாய்வானைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. சீன வற்புறுத்தலின் பேரில் தாய்வானுடன் தூதரக உறவு வைத்திருந்த சில நாடுகள் அந்த உறவைத் துண்டித்தன.

இந்தச் சூழலில், சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட சாய் வெற்றிபெற்றிருப்பது தரப்புக்கும் இடையிலான பதற்ற சூழல் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை