ரதன தேரரின் பிரேரணையை தோற்கடிக்க வேண்டும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் எண்ணத்திற்கு ஏற்ப சுபீட்சமான இலங்கை, இனவாதமற்ற அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த சகல மதங்களையும் மதிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டுமென,முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது: அத்துரலிய ரத்ன தேரர் சமர்ப்பித்துள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து தனியார் சட்டம் தொடர்பான பிரேரணை ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணானதென்றே நாம் கருதுகிறோம்.எனவே இந்தப் பிரேரணையை ரதன தேரர் மீளப்பெற வேண்டும். இவ்விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தால்,பல்லினங்களின் கலாசாரங் களை மதிக்கும் அனைவரும் தோற்கடிக்க வேண்டும்.

இவ்வேண்டுதலை முஸ்லிம் சமூகம் சார்பாக நான் விடுக்கிறேன். இவ்விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படல் அவசியம்.இந்தப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவை சந்தித்து கலந்துரையாடினர்.

இவ்வாறான தனிநபர் சட்ட மூலமொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எவ்விதப் பாதிப்புக்களும் இல்லாத வகையில் தீர்வு காணப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விவகாரங்களுடன் தொடர்புடைய விடயங்கள், அச்சமூகத்தின் அனுமதியுடனே தீர்மானிக்கப்பட வேண்டும். இதை முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்ட விஷேட அனுமதியாகக் கருத முடியாது.

நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுக்கும் இவ்வாரான விசேட சட்ட ஒழுங்குகள் பொதுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,தேச வளமைச் சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை