ஓமானின் புதிய சுல்தானாக ஹைதம் பின் தாரிக் தெரிவு

காலஞ்சென்ற சுல்தான் கபூஸின் உறவினரும் கலாசார அமைச்சருமான 65 வயது ஹைதம் பின் தாரிக் ஓமான் புதிய ஆட்சியாளராக பதவியேற்றுள்ளார்.

“சுல்தானை தேர்வு செய்யும் அரச குடும்பத்தின் சந்திப்புக்குப் பின்னர் புதிய சுல்தானாக ஹைதம் பின் தாரிக் பதவி ஏற்றார்” என்று அரசு ட்விட்டரில் அறிவித்தது.

அரபு உலகில் மிக நீண்ட கால தலைவரான சுல்தான் கபூஸ் கடந்த வெள்ளிக்கிழமை தனது 79 வயதில் காலமானார். திருமணம் புரியாமல் குழந்தைகள் இல்லாத நிலையில் முடிக்குரிய அடித்த வாரிசை அவர் விட்டுச்செல்லவில்லை.

ஓமான் அரசியலமைப்பின்படி அடுத்த தலைவரை மூன்று நாளைக்குள் அரச குடும்பம் தேர்வு செய்ய வேண்டும் என்பதோடு இணக்கம் ஏற்படாதபட்சத்தில் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கபூஸ் மூலம் தேர்வு செய்யப்படுபவர் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார்.

இந்நிலையில் கபூஸின் மற்றொரு உறவினரான துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட அஸாத் பின் தாரிக் அடுத்த சுல்தானாக நியமிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே ஹைதம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

சுமார் 50 ஆண்டுகாலம் ஓமன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சுல்தான் கபூஸ் தனது 29ஆவது வயதில் பழமைவாத ஆட்சியாளராக இருந்த தனது தந்தை சைத் பின் தைமூரை நீக்கி ஆட்சியை கைப்பற்றினார்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை