சூரியனின் இதுவரை கண்டிராத துல்லியமாக படங்கள் வெளியீடு

சூரியனின் மேற்பரப்பை துல்லியமாகக் காண்பிக்கும் இதுவரை கண்டிராத படங்களை ஹுவாயை தளமாகக் கொண்ட சூரிய தொலைநோக்கி வெளியிட்டுள்ளது.

இதில் கொதிநிலையில் உள்ள பாத்திரத்தில் வறுபடும் சோளம் போன்று சூரியனின் மேற்பரப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் காணப்படும் ஒவ்வொரு சிறு துண்டுகளும் 30 கிலோமீற்றர் அளவு பெரிதானதாகும்.

சூரியனில் உள்ள பிளாஸ்மா கொதித்த நிலையில் இருப்பதை இந்தப் படங்கள் காண்பிக்கின்றன. சூரியனின் உட்பகுதியில் இருந்து கடும் வெப்பனிலை மேற்பரப்பிற்கு தள்ளிவிடப்பட்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம் அளவு பெரிதான வெப்பச்சலனத்தை ஏற்படுத்துகிறது.

பூமியில் இருந்து 149 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் சுமார் 1.4 மில்லிய கிலோமீற்றர் விட்டம் கொண்ட சூரியனின் இந்த நெருக்கமான படங்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதப்படுகிறது.

அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் முகாமை இந்த படங்களை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சூரிய தொலைநோக்கியான டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி மூலம், சூரியனின் மேற்பரப்பில் உள்ள காந்தப்புலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை