சேவ் த ஸ்போர்ட்ஸ் விளையாட்டு, இலக்கிய விருது விழாவுக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கையின் விளையாட்டு இலக்கியத்தின் மேம்பாட்டிற்காக சேவ் த ஸ்போர்ட்ஸ் அமைப்பு நடாத்தும் “சேவ் த ஸ்போர்ட்ஸ் விளையாட்டு இலக்கிய விருது விழா - 2020” வுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் விளையாட்டு இலக்கியத்தை நோக்காகக் கொண்டு அதற்காக நடாத்தப்படும் முதலாவது ஒரேயொரு விருது விழா இதுவாகும். இதனைக் கருத்திற்கொண்டு விளையாட்டின் எதிர்கால பிரகாசம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சேவ் த ஸ்போர்ட்ஸ் அமைப்பின் தலைவர் தமீர மஞ்சு தெரிவித்தார். 

“சேவ் த ஸ்போர்ட்ஸ் அமைப்பு எமது நாட்டு விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக முன்நிற்கும் தொண்டர் அமைப்பாகும். தற்போதும் நாம் வருடாந்தம் விளையாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதனுடன் இணைந்துள்ள புதிய நிகழ்வே சேவ் த ஸ்போர்ட்ஸ் விளையாட்டு விருது விழாவாகும். உலகிலேயே விளையாட்டு இலக்கியம் என்பது தனியான ஒரு துறையாகும். இது எமது நாட்டில் காணக் கிடைக்காவிட்டாலும் உலகின் ஏனைய நாடுகளில் விளையாட்டு இலக்கியம் உயர் மட்டத்தில் உள்ளது. எமது நோக்காக இருப்பதும் எமது நாட்டின் விளையாட்டு இலக்கியத்தை அவ்வாறான உயர் நிலைக்குக் கொண்டு வருவதாகும். இன்று எமது நாட்டில் விளையாட்டு வெளியீடுகள் வருடாந்தம் எத்தனை வெளியிடப்படுகின்றது? விளையாட்டுச் சஞ்சிகைகள் எத்தனை வெளியிடப்படுகின்றது? விளையாட்டுச் சினிமா எதனை நோக்கிச் செல்கின்றது? இவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் எமக்குள்ளது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக சேவ் த ஸ்போர்ட்ஸ் விளையாட்டு இலக்கிய விருது விழா அமையாமலும் இருக்கலாம். எனினும் அதில் சில பதில்கள் இருக்கலாம் என நாம் நம்புகின்றோம்” என்றும் தமீர மஞ்சு தெரிவித்தார். 

சேவ் த ஸ்போட்ஸ் விளையாட்டு இலக்கிய விருது விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட உள்ள விருதுகளின் எண்ணிக்கை 20ஆகும். இதில் முதலாவது பிரிவின் கீழ் வழங்கப்படுவது இலங்கையின் விளையாட்டு இலக்கிய மேம்பாட்டிற்காக உயர் பங்களிப்பினை வழங்கிய வருடத்தின் தேசிய விளையாட்டு சங்கம், வருடத்தின் வர்த்தக சங்கம், வருடத்தின் விளையாட்டு விரிவுரையாளர் மற்றும் வருடத்தின் நிறுவனம் அல்லது அமைப்புக்காக வழங்கப்படும் விசேட நிபுணத்துவ சபை மதிப்பீட்டு விருதாகும்.

இரண்டாம் பிரிவின் கீழ் வருடத்தின் சிறப்பான விளையாட்டு விவரணக் கட்டுரை, விளையாட்டுச் செய்திகள் பக்கம், விளையாட்டு சஞ்சிகை, விளையாட்டு வெளியீட்டு நிறுவனம் மற்றும் வருடத்தின் விளையாட்டு இணையத்தளத்திற்காக வழங்கப்படும் விருதாகும். மூன்றாம் பிரிவின் கீழ் வருடத்தின் சிறந்த சமூக வலையமைப்பு, தொலைக்காட்சி அறிக்கை, வானொலி அறிக்கை, சினிமா விளையாட்டு இலக்கிய உருவாக்கத்திற்காகவும், நான்காவது பிரிவின் கீழ் வருடத்தின் சிறப்பான ஆங்கில மொழி, தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி விளையாட்டு இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும். 

வருடத்தின் சிறப்பான பல்வேறு விடயங்களுக்கான விளையாட்டு புத்தகம் மற்றும் வருடத்தின் சிறந்த விளையாட்டுக் கல்வி புத்தகத்திற்காக விருது வழங்கப்படுவது ஐந்தாம் பிரிவின் கீழாகும். ஆறாம் பிரிவின் கீழ் வழங்கப்படும் சேவ் த ஸ்போர்ட்ஸ் விளையாட்டு இலக்கிய தங்க விருதானது விளையாட்டு இலக்கியத்திற்காக பாரிய முயற்சிகளைச் செய்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும். 

சேவ் த ஸ்போர்ட்ஸ் விளையாட்டு இலக்கிய விருது விழாவுக்காக விண்ணப்பங்கள் 2020 பெப்ரவரி 15ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து விண்ணப்பங்களும் கடவத்தை, கண்டி வீதி, இலக்கம் 451 /4Cல் அமைந்துள்ள கடுல் வெளியீட்டு நிறுவத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். (கடவத்தை நிகாடோ சினிமா தியேட்டருக்கு எதிரில் அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டாம் மாடியின் கடுல் வெளியீட்டு நிறுவனம் அமைந்துள்ளது. 

(புத்தளம் விசேட நிருபர்) 

Fri, 01/10/2020 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை