இமாம் நவவியின் நபி மொழி தொகுப்பு வெளியீடு

மலேசிய பெற்றொனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும் பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட முன்னாள் விரிவுரையாளருமான கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எம்.நயீம் (நளீமி) எழுதிய “இமாம் நவவியின் நாற்பது நபிமொழிகள் விளக்கம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை (08) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் மாலை 06.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் கௌரவ அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். அலி சப்ரியும் கலந்து சிறப்பிப்பர்.

இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை மிஷ்காத் ஆய்வு நிறுவன பணிப்பாளரும் முன்னாள் ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளருமான உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் நிகழ்த்துவார்.

மேற்படி நிகழ்வில் உலமாக்கள்,புத்திஜீவிகள், துறைசார் அதிகாரிகள், உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் சார்பாக அஷ்ஷெய்க் ஸீ.எம்.எம் சுபைர் (நளீமி) தினகரனுக்கு தெரிவித்தார்.

 

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை