ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

ஏ.ஜே.எம். முஸம்மில் அறக்கட்டளையின், 'காந்தா சவிய' மகளிர் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில், குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்ன.

குருநாகல் நகரசபை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம். முஸம்மில் தலைமைதாங்கினார்.

இதில் சுமார் 2000 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், தேமடலுவ ரஜ மகா விகாரையின் விகாராதிபதி, ரெகவ ஸ்ரீ ஜினரத்ன தேரர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து, வடமேல் மாகாண சபை தலைவர் டிக்கிரி அதிகாரி, குருநாகல் மாநகர சபை முதல்வர் துசார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட மாகாணசபை அதிகாரிகள், வடமேல் மாகாண செயலாளர் பீ. பி. எம். சிறிசேன, வடமேல் மாகாண அமைச்சின் செயலாளர் ஏ.டி. அமரசிறி, ஆளுநரின் செயலாளர் சந்தன திஸாநாயக்க, 'காந்தா சவிய' அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

புத்தளம் விசேட நிருபர்

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை