ஜனாதிபதிக்கு கிடைத்ததை மறுக்க முடியாது

தமிழ், முஸ்லிம்களின் வாக்குகளும்

தமிழர்களும் முஸ்லிம்களும் எமக்கு வாக்களித்துள்ளனர்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கிலும் கிழக்கிலும் எமக்கு வாக்கு கிடைக்கவில்லை என கூறுவது தவறானது.

யாழ்ப்பாணத்தில் 6 வீத வாக்குகளும் மட்டக்களப்பில் 13 வீதம் மற்றும் திருகோணமலையில் 13 வீத வாக்குகளும் கிடைத்ததாக நீர்வழங்கள் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கலவாைனயில் நடைபெற்ற “மக்கள் மன்றம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும்.அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:

சுதந்திரமான இலங்கையை உருவாக்குதே இன்றைய எமது தேவையாகும். எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியாது, இரண்டாம் தரமாகாது, தனித்துவமிக்கதாக செயற்படுவது பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எமக்குக் கிடைத்த வாக்குகள் பொது மக்களுடைய வாக்குகளேயாகும்.

எமது நாடு மக்கள் நலன்புரி தேசமாகும். சுகாதார சேவைக்காகவும், கல்வி மற்றும் உயர்கல்வி மேம்பாட்டுக்காகவும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கல்விக்காக கூடுதலானான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும், பணம் இருத்தாலும் இல்லாவிட்டாலும் கடன் பெற்றாவது பிள்ளைகளை கற்க வைக்க வேண்டும். கடந்த நாலரை வருடங்களாக வருமானங்கள் தடைப்பட்டன அதேவேளை, செலவுகள் அதிகரித்தன. கடன் சுமையும் அதிகரித்துள்ளது. கடந்த நாலரை வருடங்களாக நாம் பெற்ற சன்மானம் இதுவாகும்.

எனவே மக்களுடைய வருமானம் அதிகரிக்கச் செய்யப்பட வேண்டும்.

அதே போல் செலவுகளை குறைப்பதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

ஜனவரி மாதத்தில் பொருட்களின் விலை குறைப்பு ஏற்படாவிட்டால் அது தொடர்பில் எமக்கு அறியத் தாருங்கள்.

கடன் சுமையை நீக்கிவிட்டு விவசாய உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டியில் மேலும் கடன்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

ஜனாநாயகம் என்பது மிகவும் பெறுமதியான ஒன்றாகும். நீங்கள் உறுதிப்படுத்தியது அந்த ஜனநாயகத்தையேயாகும்.

இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு 53 சத வீதமான வாக்குகளை அளித்து பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளீர்கள். இதுவே ஜனநாயகத்தின் பலமாகும்.

தமது உறவினர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.என்னுடைய அமைச்சு குடி நீருடன் தொடர்புடையதாகும்.

எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பொறுப்பு கிடைக்கவில்லை. அமைச்சுகளின் எண்ணிக்கை 15 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பதவிகளை விட இலட்சிய அரசியலே எமது இலக்காகும்.

அதன் அடிப்படையில் நாம் செயற்படுவோம். நான் இலட்சிய அரசியலை இலக்காகக் கொண்டு செயற்படுவேன்.

என்னுடைய சொந்த இலாபத்தை விட மக்களின் நலனை இலக்காகக் கொண்டு வாழ்பவன் நான் எனவும் அவர் குறிப்பட்டார்.

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை